தேர்தலில் வெற்றி பெற நடிகை ரம்யா விடிய விடிய யாகம்

தேர்தலில் வெற்றி பெற நடிகை ரம்யா விடிய விடிய யாகம்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் சார்பாக மண்டியா தொகுதியில் களமிறங்கி யுள்ள நடிகை ரம்யா மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவருடைய ஆதர வாளர்களும் காங்கிரஸ் நிர்வாகி களும் வியாழக்கிழமை விடிய விடிய சிறப்பு யாகத்தில் ஈடுபட் டனர்.

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்த லில் காங்கிரஸ் சார்பாக போட்டி யிட்ட நடிகை ரம்யா அமோக வெற்றி பெற்றார். எனவே இந்த‌ மக்களவை தேர்தலிலும் மண்டியாவில் மீண்டும் போட்டியிட ரம்யாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்னரே அவரது அரசியல் குருவான நடிகர் அம்பரீஷ் உடல் நிலை பாதிக்கப் பட்டது, உட்கட்சி தலைவர்களின் ஒத்துழையாமை, தொகுதியில் காங் கிரஸ் தலைமை அக்கறை காட்டமல் இருந்தது ஆகிய காரணங் களால் ரம்யாவின் வெற்றி கேள்விக் குறியானது.

இருப்பினும் ரம்யா மனம் தளராமல் தனி ஆளாக மண்டியா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச் சாரம் மேற்கொண்டார்.மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில் ரம்யாவின் ஆதரவாளர்கள் மண்டி யாவில் சிறப்பு பூஜை மற்றும் யாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மண்டியா தொகுதிக்குட்பட்ட பாண்டவப்புரா என்ற இடத்தில் உள்ள கணபதி கோயிலில் ரம்யா வெற்றி பெற வேண்டி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் புதன் கிழமை இரவு 11.45 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகத்தை தொடங் கினர்.11 பூசாரிகள் விடிய விடிய நடத்திய இந்த சிறப்பு பூஜை வியாழக்கிழமை முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட மண் டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கள், ரம்யாவின் ஆதரவாள‌ர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். ரம்யாவின் வெற்றிக்காக நடை பெறும் இந்த சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவு கள் வெளியாகும் வரை தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.

தோற்றாலும் கவலையில்லை

மண்டியாவில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக் குறித்து ரம்யா கூறுகையில்,''எனக்காக பூஜை யில் ஈடுபட்டிருக்கும் அனைவருக் கும் நன்றிக்கூற கடமைப்பட்டிருக் கிறேன். நான் எம்.பி.ஆக இருந்த குறுகிய காலக்கட்டத்தில் மண்டியா தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுத்தர முயற்சித்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு தேர்தல் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி இருக்கிறேன்.அதனால் நிச்சயம் வெற்றிபெறுவேன் என நம்புகிறேன்.இதையெல்லாம் தாண்டி தேர்தலில் தோற்றாலும் கவலையில்லை.ஏனென்றால் அரசியலில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க முடியாத ஒன்று''என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in