

அதிமுக வெற்றி குறித்து மதுரை ஆதீனம் கூறியதாவது: ‘அம்மா’வின் அயராத உழைப்பு. 120 கோடி மக்களின் நலன் காக்கும் வகையில் உண் மையைச் சொல்லி வாக்கு கேட்டார். தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளுக்கும் சாதனைகளுக்கும் தமிழக மக்கள் தந்திருக்கும் தீர்ப்பு இது. சாதி - மத வேறுபாடுகளை கடந்து ஆட்சி நடத்தும் மத நல்லிணக்கப் பேரரசியாக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது ஆட்சி எல்லா வகையிலும் சிறந்து விளங்கும். இந்திய திருநாட்டின் 120 கோடி மக்களின் நலனை காக்கின்ற பெரும் பங்கு அவருக்கு இருக்கிறது. தமிழகத்தில் மோடி அலை எடுபடவில்லை. திமுக-வும் காங்கிரஸும் படுதோல்வி கண்டிருக்கின்றன. “அம்மா”வின் சாதனைகள் தமிழக மக்களை வெகுவாக ஈர்த்ததே இதற்கெல்லாம் முக்கியக் காரணம். இவ்வாறு மதுரை ஆதீனம் தெரிவித்தார்.