அசாம் வன்முறைக்கு மோடியை குற்றம்சாட்ட கூடாது: சிவசேனா

அசாம் வன்முறைக்கு மோடியை குற்றம்சாட்ட கூடாது: சிவசேனா
Updated on
1 min read

அசாம் வன்முறைக்கு பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குற்றம்சாட்ட கூடாது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ செய்தி பத்திரிகை சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோடி மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறுபவர்களே ஒருகாலத்தில் நாட்டை பிரித்தவர்கள் என்றும் அத்தகைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாபா ராம்தேவ் ஆசிரமத்தில் தியானம் கற்றுக்கொண்டு மனநிலையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் மே-16 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் மனநல மருத்துவமனைகளில் சேர வேண்டியிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலை தாக்கியும் அக்கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. அசாமில் வங்கதேச முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கும் கபில் சிபல், ஒரு போதும் காஷ்மீரில் அம்மாநில இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசியதில்லை என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in