

தமிழகத்தில் பிரபலமான வேட்பாளர்கள் பலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ. ராசா உள்ளிட்ட பலர் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கவுள்ளது. பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள், தங்களுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர்களை விட ஐம்பதாயரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, வெற்றியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபலமான வேட்பாளர்கள் பலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ. ராசா உள்ளிட்ட பலர் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
மேலும், பாஜகவின் சி.பி ராதாகிருஷ்ணன் கோயமுத்தூர் தொகுதியிலும், பாஜக கூட்டணியிலுள்ள வைகோ விருதுநகர் தொகுதியிலும் தோல்வி அடைவார்கள் என நில்வரங்கள் தெரிவிக்கின்றன. நட்சத்திர வேட்பாளர்கள் சிலரின் தொகுதி நிலவரம் பின்வருமாறு:
வேட்பாளர் | தொகுதி | வாக்கு வித்தியாசம் | முடிவு |
ஆ. ராசா | நீலகிரி | 1.05.996 | தோல்வி |
டி.ஆர். பாலு | தஞ்சாவூர் | 1,45,138 | பின்னடைவு |
ஜெகத்ரட்சகன் | ஸ்ரீபெரும்புதூர் | 35,239 | பின்னடைவு |
தயாநிதி மாறன் | மத்திய சென்னை | 30,794 | பின்னடைவு |
திருமாவளவன் | சிதம்பரம் | 64,869 | பின்னடைவு |
வைகோ | விருதுநகர் | 45,439 | பின்னடைவு |
சி.பி. ராதாகிருஷ்ணன் | கோயம்புத்தூர் | 11,669 | பின்னடைவு |
உதயகுமார் | கன்னியாகுமரி | 2,99,515 | பின்னடைவு |
வசந்தகுமார் | கன்னியாகுமரி | 1,85,201 | பின்னடைவு |
பாரிவேந்தர் | பெரம்பலூர் | 2,28,127 | பின்னடைவு |
மணிசங்கர் ஐயர் | மயிலாடுதுறை | 3,08,551 | பின்னடைவு |