

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகரான பிரியங்கா மீது பாஜகவினரால் தொடுக்கப்பட்ட 2 வழக்குகள் மீது 19-ம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நரேந்திர மோடி தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக பிரியங்கா காந்தி பேசினார். இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பிஹார் மாநில பாஜக பொதுச் செயலாளர் சுராஜ் நந்தன் மேத்தா பாட்னா நீதிமன்றத் தில் பிரியங்கா மீது வழக்கு தொடுத்தார். தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் ரமா காந்த் யாதவ் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால், தனது கட்சிக்காரர் தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூர் சென்றிருப்பதால், விசார ணையை ஒத்தி வைக்க வேண்டும் என சுராஜ்நந்தன் மேத்தா சார்பில் அவருடைய வழக்கறிஞர் ஷம்பு பிரசாத் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்19-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதேபோல தர்பாங்கா மாவட்ட நீதிமன்றத்தில் பிஹார் மாநில பாஜக மீனவர் பிரிவு தலைவர் அர்ஜுன் ஷானி தொடுத்துள்ள வழக்கு மீதான விசாரணையையும் 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.