கணவரை எதிர்த்து மோடிக்கு வாக்களியுங்கள்: முஸ்லீம் பெண்களிடம் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம்

கணவரை எதிர்த்து மோடிக்கு வாக்களியுங்கள்: முஸ்லீம் பெண்களிடம் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம்
Updated on
1 min read

வாரணாசியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றியை உறுதி செய்யும் வகையில் களத்தில் இறங்கியுள்ளது சங் பரிவார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்ச்சைக்குரிய தலைவர் இந்திரேஷ் குமார் முஸ்லீம் சமுதாயத்தினரிடம் மோடிக்காக வாக்கு சேகரித்தார். கடந்த இரண்டு நாட்களாக வாரணாசியில் முகாமிட்டுள்ள இந்திரேஷ், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

பாரதிய அவாம் கட்சி, முஸ்லீம் பெண்களிடம் பிரச்சாரம் செய்ய ஏதுவாக 10 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வாரணாசி நகரிலேயே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்திரேஷ் குமார் பேசியதாவது: காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளால் முஸ்லீம் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இந்த இரு கட்சிகளும் முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி, வாக்குகளை மட்டும் பெற்றுக் கொண்டு பதிலுக்கு அவர்களுக்கு ஏந்த நன்மையும் செய்வதில்லை. ஆனால் இப்போது நரேந்திர மோடிக்கு நீங்கள் வாக்களிக்கும் காலம் வந்துவிட்டது. உங்கள் குழந்தைகள் ஒரு கையில் குரானும், இன்னொரு கையில் கணினியும் வைத்திருப்பதை மோடி மட்டுமே உறுதி செய்வார். வாக்குப்பதிவு நாளன்று உங்கள் கணவரை எதிர்த்து நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள்.

வாக்குச்சாவடிக்கு உங்களை உங்கள் கணவராவது அல்லது வீட்டின் தலைவராவது தான் அழைத்து வருவார்கள். அப்போது நீங்கள் அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள். கை சின்னம், சைக்கிள் சின்னம், யானை சின்னம் என மாறி மாறி வாக்களிக்க வைத்தீர்கள் ஆனால் எங்கள் தலையெழுத்து மாறி இருக்கிறதா? என கேளுங்கள். அவர்கள் உங்களை முறைத்துப் பார்கலாம். கோபப்படலாம். ஆனால் அதற்கு அச்சப்படாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) பத்திரிகையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திரேஷ் குமார் முஸ்லீம்கள் நிறைய பேர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். வேறு எந்த அரசியல் கட்சியினரும் முஸ்லீம்கள் நலன் குறித்து பேசுவதில்லை என்பது தான் அதற்கு காரணம். மோடி மீது அவர்களுக்கு அச்சம் இருந்தால், அவர்கள் எப்படி எனது கூட்டத்திற்கு வந்திருப்பார்கள் என்றார்.

ஆசம்கர் பயங்கரவாதிகளின் கூடாரமாக இருப்பதாக அமித் ஷா கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் இதே கருத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வேறு மாதிரி சொன்னது ஆனால் அமித் ஷாவுக்கு மட்டும் தான் உள்ளதை உள்ளடி சொல்லும் துணிச்சல் உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளைப் போல் அமித் ஷாவிற்கு வாக்கு வங்கி அரசியல் பற்றி கவலை இல்லை என்றார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in