

எம்.பி-யான எஸ்.ஆர். ஜெயதுரையிடம் பேசினோம். “கோவில்பட்டி பகுதியில் இயந்திரத்தால் செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கான 10 சதவீத கலால் வரியை ஆறு சதவீதமாகக் குறைத்தேன். 106 கோடி ரூபாயில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 586 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. தூத்துக்குடியில் கேந்திர வித்யாலயா அமைக்கத் துறைமுக நிர்வாகத்திடம் பேசினேன். இடம் தர துறைமுக சபை சம்மதித்துள்ளது. திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயிலைத் தினசரி இயக்கியது, திருச்செந்தூர் - பழனி ரயில், தூத்துக்குடி - சென்னை பகல் நேர இணைப்பு ரயில் ஆகிய ரயில்களைக் கொண்டுவந்தேன்” என்றார்.