

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வரும் 22-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக 3 நாள் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி மக்களவைத் தேர்தலுக் கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்காக கூடுதலாக ஒரு நாள் மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் துறையினர் கடிதம் எழுதி யிருந்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சி.சவுண் டையா வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தேர்தலை அமைதியாகவும், நியாயமான முறையிலும் நடத்துவதற்காக டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 22-ம் தேதி காலை 10 மணியி லிருந்து வாக்குப்பதிவு நடக்கும் நாளான 24-ம் தேதி நள்ளிரவு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப் பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக் கைகள் பற்றிய அறிக்கையை வரும் 21-ம் தேதிக்குள் தனக்கு அனுப்ப வேண்டும் என்று சவுண்டையா தெரிவித்துள்ளார்.
மே 16-ம் தேதியும்
வழக்கமாக வாக்குப்பதிவுக்கு முதல் நாளும் வாக்குப்பதிவு அன்றும்தான் மதுக்கடைகள் மூடப்படும். இப்போது முதல் முறையாக மேலும் ஒருநாள் கூடுதலாக கடைகளை மூட உத்தர விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக் ஊழியர்களும் கடை களை 3 நாட்கள் மூடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 16-ம் தேதியும் மதுக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.