

காங்கிரஸுக்கு இனி வசந்தகாலம் தான் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கரூர் மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஜோதிமணிக்கு ஆதரவாக கரூர் வேலாயுதம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பங் கேற்று அவர் மேலும் பேசியது:
காங்கிரஸுக்கு இனி வசந்த காலம்தான். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் அணைகள் கட்டப்பட்டன. இதன்மூலம் மின் உற்பத்தி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, மாநிலத்துக்கு தேவையான மின்சாரம் கிடைத்து வந்தது. ஆனால், காலப்போக்கில் மின்சாரத்தின் தேவைக்கேற்ப திட்டங்களை 40 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் உருவாக்க வில்லை. இதனால்தான் தமிழகத் தில் மின்வெட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு இந்தியாவில் மாணவர்களுக்கு மட்டும் 27ஆயிரத்து 258 கோடி கடன் வழங்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்த காமராஜரின் மதிய உணவு திட்டத்துக்கு சோனியா காந்தி, ரூ.1 லட்சத்து 37ஆயிரம் கோடி நிதியை நாடு முழுவதும் செயல்படுத்த ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் 14 கோடி மாணவர் கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் மருத்துவ வசதி திட்டத்துக்காக 37ஆயிரத்து 330 கோடி நிதி ஒதுக்கினார்.
நூறு நாள் திட்டத்தில் முதலில் வழங்கப்பட்ட கூலி ரூ.80ஐ படிப் படியாக உயர்த்தி தற்போது ரூ.168க்கு உயர்த்தியுள்ளார். காம ராஜர் ஆட்சியில் அனைத்திலும் முதலிடத்தில் இருந்த தமிழகம் இன்று எந்த இடத்தில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. காங்கிரஸ் ஆட்சியில் தான் கரூர் -சேலம் அகல ரயில் பாதை கொண்டு வரப்பட்டது. கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, லாலாப்பேட்டை மேம்பாலம் ஆகியவையும் கொண்டு வரப்பட்டது. நாட்டில் மதசார்பற்ற ஆட்சியை காங்கிரசால் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்.