

எம்.பி. லிங்கத்திடம் பேசினோம். “தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவிட்டுள்ளேன். சுகாதாரம், குடிநீர், கல்வி, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டம் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பஞ்சாலைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால், மத்திய அரசின் ஏற்றுமதிக் கொள்கையால் தொழிலாளர்களின் பிரச்சினை நீடிக்கிறது” என்றார்.