

பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ‘‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்ன செய்தார் என்பது கோலிக்கு தெரியும், அதனால்தான் அவர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்’’ என்று தெரிவித்தார். நரேந்திர மோடி பேசியபோது, ‘‘பாஜகவில் கோலி சேர்ந்திருப்பது கட்சியின் பலத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது, அவரை மனதார வரவேற்கிறோம்’’ என்றார்.