தலைவர்கள் பிரச்சாரத்தில் பாதுகாப்பு குறைபாடு?- அனைத்துக் கட்சியினர் புகார்

தலைவர்கள் பிரச்சாரத்தில் பாதுகாப்பு குறைபாடு?- அனைத்துக் கட்சியினர் புகார்
Updated on
1 min read

திருப்பூரில் கருணாநிதி, விஜயகாந்த், வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தில்கூட போதியளவு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படாதது அனைத்து கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி, திருப்பூர் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை வந்தார். ஆனால், அவர்மேடையை நோக்கிவரத் தொடங்கியதும் அவரது தொண் டர்கள் மேடைக்கு முன்புறமா கச் செல்லத் தொடங்கினர். திமுக தொண்டரணியின் தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு மேடைக்கு முன்புறமாக வந்து விட்டனர். இதனால், பலர் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

மேடைக்கு முன் பகுதியிலும், பத்திரிகையாளர் பகுதியிலும் கூட் டம் புகுந்தது. செய்தி சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் இக் கட்டான நிலைக்குத் தள்ளப்பட் டனர். தொலைக்காட்சி நேரடி ஒளி பரப்பிற்காக வீடியோ கேமராக் களை முன்பகுதியில் வைத்திருந்த பெண் பத்திரிகையாளர்கள் இன் னல்களுக்கு ஆளாகினர். ஒரு கட்டத் தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு அதிகரித்தது.

முதலில் கூட்டத்தைக் கட்டுப் படுத்தத் தவறிய காவலர்கள், பிறகு பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. 10 ஆயிரத்திற் கும் அதிகமானோர் கூடும் ஒரு கூட்டத்தில், 110 காவலர்களை மட் டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தியதாகத் தெரிகிறது.

திருப்பூரில் நடைபெற்ற சம்ப வம் குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் பிரவீண்குமாருக் கும், காவல்துறை உயர் அதி காரிகளுக்கும் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு விஜயகாந்த் பிரச்சாத்துக்கு வந்தபோதும், மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வந்தபோதும் இதே நிலைதான் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in