குடியரசுத் தலைவரின் மகனாக இருப்பதால் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு அதிகம்: மேற்கு வங்கத்தில் போட்டியிடும் அபிஜித் பேட்டி

குடியரசுத் தலைவரின் மகனாக இருப்பதால் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு அதிகம்: மேற்கு வங்கத்தில் போட்டியிடும் அபிஜித் பேட்டி
Updated on
1 min read

குடியரசுத்தலைவரின் மகனாக இருப்பதால் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பொதுமக்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். மேலும் எனது தந்தை தொடங்கிய வேலை களையும் செய்து முடிக்க வேண்டிய சவாலும் என்னை எதிர் நோக்கியுள்ளது என்றார் ஜாங்கிபூர் தொகுதியின் காங்கி ரஸ் வேட்பாளரான அபிஜித் முகர்ஜி(54)

பிரணாப் முகர்ஜி போன்ற பெருந்தலைவர்களின் மகனாக இருப்பதே பெரிய நெருக்குதலை தருகிறது .இதனால் சாதகங்களும் பாதகங்களும் கலந்தே இருக்கிறது. என்ன செய்தாலும் அவருடன் ஒப்பிட்டே எடை போடுகிறார்கள். எனது தந்தையுடன் ஒப்பிடுவது பாதகமான அம்சம். என்னை யாரும் அறிமுகம் செய்யத் தேவையில்லை என்பது எனக்குள்ள சாதகமான அம்சம். இது போன்ற நெருக்குதலுக்கு மத்தியில் எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியுள்ளது.

ஜாங்கிபூரும் முர்ஷிதாபாதும் காங்கிரஸுக்கு மக்களின் செல் வாக்கு அதிகம் உள்ள தொகுதிகள். மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து திறம்பட நடத்திச் செல்வ தால் அந்த பலம் எனது தேர்தல் வெற்றிக்கு உதவும்.

இந்த தொகுதியில் எனது தந்தை மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை தொடர்வதுதான் மிகப்பெரிய சவாலாகும். கருத்துக் கணிப்புகள் நான் தோல்வி அடையப் போவதாக கூறுகின்றன. அப்படி முடிவை கணிக்கின்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாமே.

நான் பிறப்பிலேயே அரசியல் வாதியல்ல. பாதுகாப்பான பொதுத்துறை நிறுவன உயர் பதவியை துறந்து அரசியலுக்கு வந்துள்ளேன். சவாலாக எடுத்துக்கொண்டு அரசியலில் நுழைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ஹாட்டி பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்றேன்.

என்னை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளதால் வெற்றி தோல்வியை கணிப்பது எளிதான தாக இருக்காது. தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை.

2011ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளை பதவி யிலிருந்து அகற்ற திரிணமூலுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை நான்தான் தீவிரமாக ஆதரித்தேன். தேர்தலுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியைப் போலவே எங்களையும் திரிணமூல் நடத்தியது. அதை ஏற்கவில்லை என்றார் அபிஜித்.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானதும் ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி உறுப்பி னர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நல்ஹாட்டி பேரவைத்தொகுதி உறுப்பினராக இருந்த அபிஜித் எம்.எல்.ஏ. பதவியை காலி செய்துவிட்டு ஜாங்கிபூர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார். 2536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in