மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வு: சென்னையில் அத்வானி உறுதி

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழக பிரச்சினைகளுக்குத் தீர்வு: சென்னையில் அத்வானி உறுதி
Updated on
1 min read

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.

வேலூர் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட் பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக திங்கள்கிழமை மதியம் விமானம் மூலம் சென்னை வந்தார் அத்வானி. அப்போது விமான நிலை யத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் நானும் அந்த அமைச்சரவையில் இருந் தேன். அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளே இல்லை. ஆனால் ஐ.மு. கூட்டணி ஆட்சியில் அது தலை தூக்கியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச் சகத்தின் செயல்படாத தன்மையே இதற்குக் காரண மாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அதேபோல் நதிகளை இணைக்கவும் பாஜக முயற்சி எடுக்கும். இவ்வாறு அத்வானி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in