

தான் அ.தி.மு.க.வில் இணையப் போவது குறித்து மு.க.அழகிரிக் குத்தெரியும் என்று ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சுக்கு அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தென்மண்டல தி.மு.க.வின் முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி. இவரது தீவிர ஆதரவாளர் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி வியாழக்கிழமை அ.தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தான் அ.தி.மு.க.வில் இணையப்போவது மு.க. அழகிரிக்குத் தெரியும் எனத் தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் உள்ள அழகிரியை எமது நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜே.கே.ரித்தீஷ் அவ்வாறு கூறி இருப்பது முழுக்க முழுக்க தவறான செய்தி. அவர் அ.தி.மு.க.வில் இணையப்போவது குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. எதற்காகப் போனார் என்ற காரணமும் தெரியாது என்றார்.