

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் செலவு கண்காணிப்பாளர்கள் குழு இது வரை ரூ. 195 கோடியைப் பறிமுதல் செய்துள்ளது.
அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ரூ.118 கோடியுடன் ஆந்திரம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் ரூ.18.31 கோடி, மகாராஷ்டிரத்தில் ரூ.14.40 கோடி, உத்தரப்பிரதேசத்தில் ரூ.10.46 கோடி, பஞ்சாபில் ரூ. 4 கோடி மற்றும் இதர மாநிலங்களில் சிறிய அளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 26.56 லட்சம் லிட்டர் மதுபானம், 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் சார்ந்து 11,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர துறை அதிகாரிகளைக் கொண்ட வலிமையான 659 கண்காணிப்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.