

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சிவசேனையுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி தெரிவித் துள்ளார்.
சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவரான அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2009 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின்போது உத்தவ் தாக்கரே என்னைத் தொடர்பு கொண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பணித்தார். அதன்படி நானும் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
அப்போது சிவசேனையுடன் கூட்டணி அமைக்க பவார் விருப்ப மாக இருந்தார். ஆனால் திடீரென பின்வாங்கிவிட்டார். அதற்கான காரணம் தெரியாது என்று மனோ கர் ஜோஷி தெரிவித்தார்.
சில நாள்களுக்கு முன்பு பிரச்சா ரத்தில் பேசிய சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பங்கேற்க சரத் பவார் விருப்பப்பட்டார், ஆனால் அதனை நான் தீவிரமாக எதிர்த்ததால் அன்றைய மத்திய அரசில் பவாரால் இணைய முடியவில்லை என்று கூறினார். பாஜக மூத்த தலைவரான கோபிநாத் முண்டே அண்மை யில் பேசியபோது, தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அதன் தலைவர்களை பவார் தொடர்பு கொண்டார்.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணி தலை வர்களுடன் நான் பேச்சு வார்த்தை நடத்தினேன். அவர்களின் ஒருமித்த கருத்தின்படி பவாரை புறக்கணித் தோம் என்று தெரிவித்தார்.
இந்தத் தகவல்களை உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் மக்களவை முன்னாள் தலைவருமான மனோகர் ஜோஷி பி.டி.ஐ.க்கு பேட்டியளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் மறுப்பு
இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறியபோது, சிவசேனையில் மனோகர் ஜோஷி ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
அவருக்கு மக்களவை தொகுதி சீட்டோ, மாநிலங்களவை உறுப்பினர் பதவியோ அளிக்கப்பட வில்லை, எனவே கட்சியில் ஏதாவது ஓர் இடத்தைப் பிடிக்க மனோகர் ஜோஷி இதுபோல் பொய்களைப் பேசி வருகிறார் என்றார்.