

எனது கைக்கு அதிகாரம் வரும்போது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை சிறையில் அடைப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.
இதுகுறித்து அவர் ஜான்சியில் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “சோனியா காந்தியின் மருமகன் என்பதால், காங்கிரஸ் ஆளும் எல்லா மாநில அரசுகளும் ராபர்ட் வதேராவைக் கண்டு அஞ்சு கின்றன. மத்திய அமைச்சர்களும் அவரது நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். அனைத்து சட்டவிதிகளையும் மீறி வதேரா பணம் சம்பாதிக்கிறார்.
எனது கட்சி என் மீது கோபப்பட்டாலும் சரி, எனது கைக்கு அதிகாரம் வரும் போது, வதேராவை நான் சிறைக்கு அனுப்பு வேன்” என்றார்.
உமா பாரதி இது போன்று கூறுவது இது இரண்டாவது முறை. அவர் கடந்த வாரம் கூறுகையில், “ராபர்ட் வதேரா பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்றார்.
பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு நேர்மாறாக உமா பாரதி பேசிவருகிறார்.