

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் இருந்து 6-வது முறையாக சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார்.
சீமாந்திரா பகுதியில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சந்திரபாபு நாயுடு புதன்கிழமை வெளியிட்டார். இதில் 47 சட்டப்பேரவை மற்றும் 7 மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 6-வது முறையாகக் களமிறங்குகிறார் சந்திரபாபு. இவர் இதே தொகுதியில் கடந்த 1989ம் ஆண்டு முதல் போட்டியிட்டு தொடர்ந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறார். இதுவரை தோல்வியே காணாத நாயுடு, 6-வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார் என தெரிந்ததும், குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசகட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சித்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக சிவ பிரசாத், நகிரி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முத்து கிருஷ்ணம்ம நாயுடு, ஸ்ரீ காளஹஸ்தி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.