

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ணத்தில் அமைந்துள்ளது தென்காசி. ஆன்மிக உலகில் வடக்கே இருக்கும் காசிக்கு இணையாகப் பெயர் பெற்றது தென்காசி கோயில். பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது அந்தக் கோயில். தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அரிகேசரி பராக்கிரம பாண்டியன், இலங்கை மீது படையெடுத்து சிங்களரை வென்றதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.