தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்; விஜயசாந்தி, ஜெயசுதா உள்பட 111 வேட்பாளர்கள் அறிவிப்பு

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்; விஜயசாந்தி, ஜெயசுதா உள்பட 111 வேட்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகைகள் விஜயசாந்தி, ஜெயசுதா உள்பட 111 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

தெலங்கானாவின் மொத்த சட்டமன்றத் தொகுதி 119 ஆகும். காங்கிரஸ் பட்டியலில் 111 வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப் பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் காக 8 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலங்கானா பகுதி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தாமோதர் ராஜா நரசிம்மா, பொன்னால லட்சுமியய்யா, குண்டூரு ஜனா ரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, சுதர்சன் ரெட்டி, தர் பாபு, டி.கே.அருணா ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் காங்கிரஸில் இணைந்த நடிகை விஜயசாந் திக்கு மேடக் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. செகந்திராபாத் தொகுதியில் நடிகை ஜெய சுதாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in