என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?
Updated on
1 min read

குறிச்சி எஸ். சுலைமான் - நிர்வாகி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்:

கடையநல்லூர் பகுதியிலிருந்து ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர். அங்கு அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் யாரைத் தொடர்புகொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பாஸ்போர்ட் விவரங்கள், வெளிநாடுகளில் வேலை தரும் நிறுவனங்களின் நம்பகத்தன்மைபற்றி மத்திய அரசு மூலம் அறிந்துகொள்ள தொகுதியில் தகவல் தொடர்பு மையம் அமைக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருவோருக்குத் தொழில் தொடங்க உதவிகளைச் செய்ய வேண்டும்.

ஆ. வெங்கடேசன் - மாணவர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர், தி.மு.க.

தென்காசியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற எம்.பி-க்கள் குரல் கொடுக்கவில்லை. தொகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இல்லை. விவசாயத்தை மட்டுமே மக்கள் நம்பியிருக்கின்றனர். எனவே, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். குற்றாலம் சுற்றுலாத் தலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in