

“2002 குஜராத் கலவரம் தொடர்பாக நான் அமைதி காக்கவில்லை. ஆனால் உண்மையை புரிந்துகொள்வதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை” என்று குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “குஜராத் கலவரம் தொடர்பாக நான் அமைதி காக்கவில்லை. கலவரத்தின்போது நான் என்ன செய்தேன் என்பதை கூறியுள்ளேன். 2002 முதல் 2007 வரை நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நான் பதில் அளித்துள்ளேன். ஆனால் உண்மையை புரிந்துகொள்வதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை. இந்த சதிச்செயல்களுக்கு அடையாளம் தெரியாத ஒரு சக்தி காரணம்” என்றார்.
குஜராத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த வகுப்புக் கலவரத்துக்கு மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஒருபோதும் மன்னிப்பு கேட்டதில்லை. இந்நிலையில் இந்த பொதுத் தேர்தலுக்கு மத்தியில், குஜராத் கலவரம் தொடர்பான கேள்விகளை அவர் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்.
குஜராத் கலவரத்தை தடுக்க மோடி போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ளது