

இந்தத் தேர்தல், மதச்சார்பற்ற தன்மைக்கும் மதவாதத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு 5.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது 7.5 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கிராமங்களில் சாலை வசதி, சுகாதாரம் மேம்பாடு முதலியவற்றில் மத்திய அரசு தனிக் கவனம் செலுத்தியது. சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி, சிறு பான்மையினருக்கான கடனுதவி பெறுவோர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. கல்விக்காக மட்டும் ரூ.79,451 கோடி ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் மீண் டும் ஆட்சிக்கு வந்தால் சுகாதாரம், ஓய்வூதியம், குடியிருக்க சொந்த வீடு, சமூகப் பாதுகாப்பு போன்வற்றுக்கான உரிமைகளைத் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் காழ்ப் புணர்ச்சியும், தனி மனித விமர் சனங்களுமே இரண்டு திராவிட கட்சிகளுக்குள்ளும் நடந்து வருகின்றன.
இத்தேர்தல் மதச்சார்பற்ற தன்மைக்கும், மதவாதத்துக்கும் இடையிலான தேர்தலாக மாறி யுள்ளது. இதை நிரூபிக்கும் வகை யில் சில நாட்களாக இந்துத்துவ அமைப்பினர் சிறுபான்மையினரை மிரட்டி வருகின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அயராது பாடுபட்டு வெற்றிக் கனியை பறித்திட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஞானதேசிகன் கூறியுள்ளார்.