மோடி தலைசிறந்த பிரதமராக திகழ்வார்: ராமன் சிங்

மோடி தலைசிறந்த பிரதமராக திகழ்வார்: ராமன் சிங்
Updated on
1 min read

நரேந்திர மோடி, இந்திய வரலாற்றின் சிறந்த பிரதமராக திகழ்வார் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையில் இந்தியா தனது உண்மையான பலத்தை உணர்வதோடு உலக நாடுகள் மத்தியில் தனது பெருமையை நிலைநாட்டும் என அவர் கூறினார்.

பாஜகவில் உட்கட்சி பூசல் எதும் இல்லை என்று கூறிய அவர் தேர்தல் கருத்துகணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதை சுட்டிக்காட்டி, மோடி நிச்சயம் பிரதமராவார் என்றார்.

காங்கிரஸ் கட்சி ஊழலில் திழைக்கிறது, எனவே மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை பாஜகவால் மட்டுமே தர முடியும். நாட்டில் மோடி அலை பலமாக உள்ளது, சத்தீஸ்கரில் 11 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது நிச்சயம், என்றார்.

மேலும், ராஜ்நந்தகானில் போட்டியிடும் தனது மகன் அபிஷேக் சிங் குறிப்பிடத்தக்க வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என ராமன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in