பாஜக தேர்தல் அறிக்கை: கூட்டணி கட்சிகள் நிலை என்ன?- ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

பாஜக தேர்தல் அறிக்கை: கூட்டணி கட்சிகள் நிலை என்ன?- ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
Updated on
1 min read

பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து அதன் கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:

பாஜக தனது தேர்தல் அறிக் கையில் மதவெறி திட்டத்தையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள தாராள மயமாக்கல் திட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து பாஜகவோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத் துள்ள தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டப்போவதாக பாஜக கூறுவது வார்த்தை விளையாட்டு. சிறுபான்மை மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து அந்நியப்படுத்தவே அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்வோம் என்கிறது. சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது. இட ஒதுக்கீட்டை கைவிடுவதற்காகவே ‘அனை வருக்கும் சம வாய்ப்பு’ என்ற கோஷம்.

சிறுபான்மை மக்களும் பாஜகவுக்கு வாக்களிக்க தயா ராக இருப்பதாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயன்றது. ஆனால், இப்போது வகுப்புவாதத்தையும் தாராள மய பொருளாதாரக் கொள்கை யையும் வலியுறுத்தும் கட்சிதான் பாஜக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in