

பாஜக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நாட்டு முன்னேற்றத்திற்குத் தேவையான பல அம்சங்கள் உள்ளதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். பாஜக வகுப்புவாத அரசியலை முன்னிறுத்துவதாகச் சொல்லுகின்ற கம்யூனிஸ்டு கட்சியினர், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள 44 மற்றும் 370 சட்டப் பிரிவுகளைப் பற்றி அறியா தவர்கள் அல்லர்.
அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நீதிமன்றத் தினுடைய வழிகாட்டுதல்படி அயோத்தியில் ராமர் கோயில் அமைப் போம் என்பதும், இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தைத் தகர்க்காமல் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுவுமே பாஜக கட்சியின் நிலைப்பாடு. எனவே இதுகுறித்து கம்யூனிஸ்டுகள் பாஜகவை விமர்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.