

எம்.பி. ஆ. ராசா தரப்புடன் பேசினோம், “நீலகிரி தொகுதி எம்.பி-யாக வெற்றிபெற்றதால், தொகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கான ஆய்வை ராசா மேற்கொண்டார். ஹெலிகாப்டர் சேவை, கேபிள் கார் திட்டம், உதகையில் கணினி மென்பொருள் ஆராய்ச்சி நிலையம் ஆகிவற்றுக்கான ஆய்வுகளை மேற்கொண்டார். ஆனால், 2 ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பின்னர், எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் தொகுதியில் பலருக்கும் பண உதவி தொடங்கி, அரசுரீதியிலான உதவிகள் வரை செய்திருக்கிறார்” என்றனர்.