

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எழுதிய கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார், கவிஞர் கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி, கம்பர் வாழ்ந்த நாட்டரசன்கோட்டை என வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களைக் கொண்டது சிவகங்கை மாவட்டம். வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆண்ட பூமி இது. சிவகங்கை அரண்மனை, செட்டிநாட்டு வீடுகள், புராதனக் கோயில்கள் நிறைந்து இன்றும் பழமை மாறாமல் உள்ளது சிவகங்கைத் தொகுதி.