

எம்.பி.-யான சிவசாமியிடம் பேசினோம், “இதய அறுவைச் சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காகப் பிரதமர் நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் வரை 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 கோடி ரூபாய் நிதி வாங்கிக்கொடுத்துள்ளேன். திருப்பூர் ஜமுனைப்பள்ளம் குறுக்கே ரூ. 40 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஃபர்னிச்சர் வாங்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளேன். 30 ஆண்டு காலக் கோரிக்கையான கொடிவேரி - பவானி ஆற்றின் குறுக்கே 12.5 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன்” என்றார்.