இது எம் மேடை: ஐரோப்பிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்

இது எம் மேடை: ஐரோப்பிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்

Published on

ஏ.சக்திவேல் - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்:

ஐரோப்பிய நாடுகளுடன் பின்னலாடைத் தொழில் தொடர்பாக, வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். வருகிற மத்திய அரசு அதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், நம்முடைய ஏற்றுமதியில் 50% ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் செல்கிறது. வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதன் மூலமே உள்ளூர் ஏற்றுமதியாளர்கள் பயன் அடைய முடியும். மேலும், திருப்பூர் நகரமும் தொழில் வளர்ச்சி பெறும்.

திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கவும் திருப்பூரை நம்பி வரும் தொழிலாளர்கள் தங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கவும் வேண்டும். தொழிலாளர்களுக்குத் தங்கும் விடுதிகளைக் குறைந்த வாடகையில் ஏற்படுத்தித்தர வேண்டும். நம்முடைய ஏற்றுமதி முழுவதும் தூத்துக்குடி துறைமுகம் வழியாகத்தான் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே, திருப்பூர் - தூத்துக்குடி துறைமுகத்துக்கு அகலமான சாலை வசதி செய்துதர வேண்டும். மேலும், துறைமுகத்தில் ஏற்படும் செலவினங்களைக் குறைக்க கவனம் செலுத்த வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in