

டி. அருளாளன் - செயலாளர், பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்கம், ஆரணி.
இங்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாலாறு, தென் பெண்ணை, செய்யாறு நதிகளை இணைக்க வேண்டும். படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை கட்டியும் திறக்கப்படாமல் உள்ளது. அணையின் பழுதுகளைச் சீரமைத்து நீரைத் தேக்கிவைக்க வேண்டும். அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றும்போது போளூர், ஆரணி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைத்திட வேண்டும்.
இங்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இயற்கை உரங்கள் தயாரிப்பு மற்றும் இயற்கை வேளாண்மை உற்பத்தி மையங்களை அமைக்க வேண்டும்.
கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் இங்கு பட்டு ஜவுளிப் பூங்கா கொண்டு வர வேண்டும். கைத்தறிப் பட்டு வளர்ச்சிக்கு டான்சில்க் நிறுவனத்தை ஆரணியில் இயக்க வேண்டும். இதன் நிர்வாகத்தில் நெசவுத் தொழில் தொடர்புடையவர்களை அமர்த்த வேண்டும். பட்டுப் புழு வளர்ப்புத் தொழிலை ஊக்குவித்து மேலும் அதிகரிக்க வேண்டும். இதனால், கைத்தறி நெசவாளர்களுக்கு தேவையான கச்சாப் பட்டு ஆரணியிலேயே உற்பத்தி செய்யப்படும்.