

மு. கந்தசாமி - சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்.
ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 43 விடுதிகள், மூன்று பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. காரைக்குடியில் சட்டக் கல்லூரி இல்லாத குறையைப் போக்க வேண்டும். ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தும் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். கொண்டு வரவில்லை. விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் தேவை. இந்த மாவட்டம் உதயமாகும் முன்பே எம்.பி-யாக இருந்த ப. சிதம்பரம், தொகுதியில் தன் பெயர் சொல்லும்படியாக எதையுமே செய்யவில்லை.
பி.எம். ராஜேந்திரன் - பா.ஜ.க. மாவட்டத் தலைவர்:
தமிழகத்தில் மிகவும் புறக்கணிக்கப்படுகிற பகுதி சிவகங்கைதான். இங்கு புதிய திட்டங்கள் தொடங்கவோ, கூடுதல் ரயில்கள் விடவோ ப.சிதம்பரம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
காரைக்குடி - திருப்பத்தூர் - மதுரை புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டம் ஆய்வுப் பணியுடன் நிற்கிறது. திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் பாதையைப் பிரித்துப்போட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. பணிகள் முடியவில்லை.
ஏ.டி.எம்., வங்கிக் கிளைகள் திறந்தது எல்லாம் சாதனைகளா?