

எம்.பி. கணேசமூர்த்தியின் ஆதரவாளர்களிடம் பேசினோம். “தொகுதி வளர்ச்சி நிதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. சுமார் 7,000 ஏழைத் தொழிலாளர்களுக்கு ரயில் கட்டணச் சலுகை வசதி பெற்றுத்தந்துள்ளார். 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக 60 கோடி ரூபாயை தனியார் அறக்கட்டளை மூலம் பெற்றுத்தந்துள்ளார். தனியார் வங்கி மூலம் 100 கோடி ரூபாயை விவசாயிகளுக்குக் கடனாகப் பெற்றுத் தந்துள்ளார். கிடப்பில் இருந்த 392 கோடி ரூபாய் மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்துக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் மத்திய அமைச்சரைச் சந்தித்து நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளார்” என்றனர்.