

பாபு - ம.தி.மு.க. வழக்கறிஞர் பாசறை:
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை. இந்தத் தடத்தில் அகல ரயில் பாதை பணிகள் முடிந்து, போக்குவரத்து தொடங்கப்பட்டும் சென்னைக்கு ரயில் சேவை கிடைக்கவில்லை. ரயில்வே அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதிக் கேட்டோம். ஆனால், ரயில் பெட்டிகள் குறைவாக உள்ளன, ஆட்கள் பற்றாக்குறை என்று பதில் அனுப்புகின்றனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் அழுத்தமாகக் குரல் கொடுக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் சொல்கிறது.
கார்த்திகை தீபம், பௌர்ணமி உட்பட விசேஷ காலங்களில் இங்கு வரும் லட்சக் கணக்கான பக்தர்கள் நேரடியாக சென்னைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்லப் போதுமான பேருந்து வசதிகளும் இல்லை. இதனால், விசேஷ காலங்களில் பேருந்துகளில் கடும் நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டுப் பயணிக்கின்றனர். திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதைத் திட்டமும் அறிவிப்போடு முடங்கிவிட்டது. மாநில அரசு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பதில் காலம் தாழ்த்துவதாக எம்.பி. வேணுகோபால் குற்றம்சாட்டுகின்றார். ஆனால், தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.