

ஜ.ஆர். சுப்ரமணியன் - முன்னாள் நாமக்கல் மாவட்டத் தலைவர், காங்கிரஸ்:
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாகச் செயல்படுத்தியுள்ளார். சேலம்-கரூர் பயணிகள் ரயில் இயக்கத்துக்கு எம்.பி. காந்திச்செல்வன் பங்களிப்பு அதிகம். அதேவேளையில், தேர்தல் சமயத்தில் பொறியியல் கல்லூரி கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி மாற்றத்தால் அந்த வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரி கொண்டுவந்திருந்தால் பயனாக அமைந்திருக்கும்.
கே. வாசுசீனிவாசன் - தலைவர், இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம், நாமக்கல்:
நாமக்கல், திருச்செங்கோடு நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை பல ஆண்டுகளாக நிலவிவருகிறது. அதற்குத் தீர்வு காணும் வகையில், வட்டச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்த வட்டச்சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதியில் உள்ள கொல்லிமலை, மூலிகை நிறைந்த மலை. அங்குள்ள மூலிகை வளத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.