

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
2004-ம் ஆண்டு முதல் தேசத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெறுப்பு அலை வீசுவதாக கூறிய அவர், தேர்தலில் காங்கிரஸ் தோல்வி உறுதியாகிவிட்டது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதற்கும், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதற்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.