விழுப்புரம்
என்ன செய்தார் எம்.பி.?
எம்.ஆனந்தன் அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது கிடைத்த தகவல்கள்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே ரூ. 50 லட்சம் செலவில் நோயாளிகள் காத்திருக்கும் அறை கட்டவும், கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு திருக்கோவிலூர் வழியாக ரயில் விட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நிறைய கிராமங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டுமே இருந்த தொழிலாளர் குறை தீர்க்கும் அலுவலகம், எம்.பி-யின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கும் கொண்டுவரப்பட்டது. சின்ன முதலியார் குப்பம், பொம்மையார் குப்பம், சோதனைக் குப்பம் பகுதிகளில் கடல் அரிப்பால் மக்கள் சிரமப்பட்டுவந்தனர். அவர்களுக்கு ரூ. 35 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க எம்.பி.யால் முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
