

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதனன் மிஸ்திரி களத்தில் உள்ளார். இந்தத் தொகுதியில் 1591 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி வினோத் ராவ் தெரிவித்தார்.
பொதுவாக ஒரு தொகுதியில் 10 சதவீத வாக்குச் சாவடிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். முதல்முறையாக வதோதரா தொகுதியில் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.