

எம்.பி. ரித்தீஷிடம் பேசி னோம். “தொண்டியில் ரசாயனம் மற்றும் உரத் தொழிற்சாலைக்கான முதல்கட்டப் பணிகள் முடிந்துள்ளன. ராமேஸ்வரம் - காசி விரைவு ரயில் கொண்டுவரப்பட்டது. மதுரை - மண்டபம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடக்கின்றன. ராமநாதபுரம் பாரதி நகர் ஊரணியில் தேங்கிய மழை நீரை சக்கரைக் கண்மாயில் சேர்க்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. மீனவர்களுக்காக நாடாளுமன்றத்தில் தொடந்து குரல் கொடுத்தேன். ஆனாலும், பிரச்சினைகள் தீராதது எனக்கும் வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் சிலருக்குப் படகுகள் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளேன்” என்றார்.