

எம்.பி. ஓ.எஸ்.மணியனிடம் பேசி னோம். “கொள்ளிடத்தில் வெள்ள காலங்களில் ஆண்டுதோறும் உடைப்பு காரணமாகப் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இதற்காக பிரதமரிடம் நேரில் பேசி 240 கோடி ரூபாய் பெற்று கரைகளைப் பலப்படுத்தி, கரையோரச் சாலைகளும் அமைக்கப்பட்டன. ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு வகை மோட்டாருடன் கூடிய பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கும்பகோணம் ரயில் நிலையத்தில் 1.10 கோடி ரூபாயில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்களில் எட்டு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன. பிரதமரின் நிவாரண நிதி, தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தனியார் நிதியுதவிடன் 90 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய உதவியுள்ளேன்” என்றார்.