

எம். மருதவாணன் - செயலாளர், அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பு, கடலூர்.
கடலூர் நகர வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ராஜீவ் காந்தி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 10 ஆண்டுகளாக அறிவிப்புடன் நிற்கிறது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுவழிச் சாலை ஏற்படுத்தப்படவில்லை. பெருங்குடி - புதுச்சேரி - கடலூர் ரயில் பாதைத் திட்டம் அறிவிப்போடு நிற்கிறது.
வேணுகோபால் - நீர் பயன்படுத்துவோர் நலச் சங்கத் தலைவர், திட்டக்குடி.
நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு, ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வெலிங்டன் ஏரியில் இரண்டு மீட்டர் அளவுக்கு வண்டல் படிந்துள்ளது. அதனைத் தூர்வார வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.