

2011 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர்
வென்றவர்: எஸ். கோகுல இந்திரா (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 88954
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வி.கே. அறிவழகன் (காங்)
பெற்ற வாக்குகள்: 52364
அதிமுகவின் எஸ்.கோகுல இந்திரா இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். சிறிது காலம் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். சென்னையின் பல தொகுதிகளில் ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகத்துக்கு அமோக அதரவை மக்கள் தெரிவித்திருந்த நிலையில் சென்னை அண்ணா நகர் தொகுதியிலோ மிக சுமார் ரகம் தான் என்கிறார்கள்.
மேடும் , பள்ளமுமாய் சாலைகள், போக்குவரத்து நெரிசல் , குப்பைகள் சரிவர அகற்றப் படாதது , ஆங்காங்கே சாக்கடைகள் நிரம்பி வழிவது என்று ஏகப்பட்ட அதிருப்தி மக்களிடம் காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கும் பரவாயில்லை ரகம் தான் என்கிறார்கள் மக்கள். அரசு மருத்துவ வசதிகள், அருகாமையில் பள்ளி, கல்லூரிகள் , மின் வெட்டு குறைந்துள்ளது, போக்குவரத்து வசதிகள் ஆகியவை மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ளது.