

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, 1957-ல் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி உருவானது. அந்தத் தேர்தலில்தான் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டு, திருவண்ணாமலையில் இரா.தருமலிங்கம் வெற்றி பெற்றார். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையாக வீற்றிருக்கும் அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை. உலகம் முழுவதும் இருந்து இந்தத் தலத்துக்குப் பக்தர்கள் வருகின்றனர்.