

டி. சக்தி செல்வகணபதி - தலைவர், காந்தியன் அறக்கட்டளை, திருவாரூர்.
விவசாயப் பகுதியான இந்தத் தொகுதியில், மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி எல்லாம் வந்தும் இன்னமும் விவசாயப் பல்கலைக் கழகம் இல்லை. இங்கு விவசாயப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால், நவீன ஆராய்ச்சிகள், புதிய சாகுபடி முறைகள் மூலம் விவசாயம் மேலும் வளர்ச்சி பெறும். தென்னை மரங்கள் அதிகம் உள்ளதால், தென்னை மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.
பி.வி. ராஜேந்திரன் - நாகை தெற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக அதிகமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ரயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. அதன் மூலம் உப்பு ஏற்றுமதி அதிகரித்து, தொழில் மேம்படும். மணல் சாலைகளாகவே இருக்கிற உப்பளப் பகுதிகளுக்கு நல்ல சாலை அமைக்க வேண்டும். மத்திய அரசின் உப்புத் துறைக்குச் சொந்தமான குத்தகை உப்பளங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.