

திருச்சி எம்.பி-யான குமாரிடம் பேசினோம், “விமான நிலைய விரிவாக்கத் துக்காக ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தைப் பெற ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் பேசி ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. மிகக் குறைந்த நிதியே ஒதுக்கீடு செய்யப்படுவதால் ரயில்வே, நெடுஞ்சாலைப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன. பாய்லர் ஆலை உதிரிபாகத் தொழிற்சாலைகள் பிரச்சினையைச் சந்திப்பதுகுறித்து எனது கவனத்துக்குத் தகவல் வரவில்லை. வந்தால், அந்தக் குறைகளைக் களைய உரிய அமைச்சகத்தில் பேசி நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.