

2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம்
வென்றவர்: ஜே.சி.டி. பிரபாகர் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 68612
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. அன்பழகன் (திமுக)
பெற்ற வாக்குகள்: 57830
தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான - ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பனியாற்றிய ஜே.சி.சி பிரபாகரன் (அதிமுக ) இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்.
இந்தியாவில் பெரும் பரப்பளவையும் அதிக வாக்காளர்களையும் கொண்டிருந்த வில்லிவாக்கம், தொகுதி வரையறைக்கு பின் சராசரி சட்டமன்ற தொகுதியாக மாறியிருக்கிறது. தொகுதிக்குள்ளும் , அருகாமையிலும் தொழிற்பேட்டைகள் அமைந்திருப்பதால் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை என்கிறாரகள் தொகுதி மக்கள். ரேசன் விநியோகத்திலும் , மின் விநியோகத்திலும் பெரும் திருப்தியை தெரிவித்துள்ளனர் மக்கள்.
குடிநீர் விநியோகம், போக்குவரத்து கட்டமைப்பு, அரசு மருத்துவ மனைகள் ஆகியவையும் மக்கள் மனதில் நிறைவை தந்துள்ளது. கழிவுநீர் அகற்றும் வசதிகள், சாலை வசதிகள் ஆகியவை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கள ஆய்வில் முன்வைத்துள்ள மக்கள் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்ற வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர்.