வாக்களித்த மோடியின் தாயார், மனைவி

வாக்களித்த மோடியின் தாயார், மனைவி
Updated on
1 min read

நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், அம்மா ஹிராபா மோடி ஆகியோர் குஜராத்தில் நேற்று வாக்களித்தனர்.

7-வது கட்ட தேர்தலின்போது குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மெக்சானா தொகுதியில் மோடியின் மனைவியும், காந்தி நகர் தொகுதியில் மோடியின் தாயாரும் வாக்களித்தனர்.

குஜராத்தின் வதோதரா, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய தொகுதிகளில் இருந்து மோடி போட்டியிடுகிறார். வதோதரா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோதுதான் மோடி, தனது மனைவி யசோதா பென் என்பதை முதல்முறையாக வெளிப்படையாகக் குறிப்பிட்டார். யசோதா பென் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார்.

தனது உறவினர்கள் சிலருடன் வந்து அவர் வாக்களித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்திப் பதை தவிர்த்துவிட்டு உடனடியாக கிளம்பிச் சென்றுவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in