

இந்தத் தொகுதியில் முதன்முதலில் வென்ற டி.டி. கிருஷ்ணமாச்சாரி இந்தியாவின் நிதியமைச்சராக 1956 முதல் 1958 வரையிலும், பிறகு 1964 முதல் 1966 வரையிலும் பதவிவகித்தார். இவர் மிகப் பெரிய தொழிலதிபரும்கூட. தென் சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலத்தில் வித்திட்டது ‘டி.டி.கே.' என்கிற பெயரில் மருத்துவம், டெக்ஸ்டைல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய துறைகளில் செயல்பட்ட இவரது நிறுவனங்களே.
அண்ணா இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதுதான் அண்ணாவின் எதிர்ப்பையும் மீறி நாடாளு மன்றத்தில் பிரிவினைவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் அவர் தனித் தமிழ்நாடு கொள்கையைக் கைவிட்டு, மாநில சுயாட்சிக் கொள்கைக்கு மாறினார்.