

17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியினர் தென்னிந்தியாவில் கால்பதித்த இடம் கடலூர். 1745 முதல் 1758 வரை தென்னிந்தியத் தலைநகராக விளங்கியது கடலூர். இன்று பாழடைந்துகிடக்கும் புனித டேவிட் கோட்டையே அன்றைய ஆங்கிலேயர்களின் தலைமைச் செயலகம்.
1920 டிசம்பர் 17-ம் தேதி ஒருங்கிணைந்த சென்னை மாகாண முதல் பிரீமியராக (ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர்) நியமிக்கப்பட்டவர் கடலூரைச் சேர்ந்த சுப்பராயலு ரெட்டியார். ஆங்கிலேயர்கள் வெள்ளாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகிய ஆறுகள் வழியாக சேலம் கஞ்சமலையில் கிடைத்த கனிமங்களை கடலூர் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து அவற்றை இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்றனர்.